தனிமைப்படுத்தல் ஊரடங்கின் காரணமான வாழ்வாதாரத்தை இழந்த  குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவு இன்றுவரை 727,339 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கள், தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

வாழ்வாதாரத்தை இழந்த  குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவு தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின்  செயலாளர் என். எச் எம். சித்ரானந்தாவுடன் இன்று அமைச்சர் சமல் ராஜபக்ஸ  ZOOM தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஆய்வு நடத்தினார்.

 

இந்த உதவித் தொகையை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக வழங்குமாறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய கோவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியில் மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் கடமைகள் மற்றும் அர்ப்பணிப்பை அமைச்சர் சமல் ராஜபக்ஷ பாராட்டினார்.