• அமைச்சினால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தொழில்நுட்ப உதவி, ஆலோசனை மேற்பார்வை மற்றும் முன்னேற்ற கண்காணிப்பு ஆகியவற்றை வழங்குதல்.
  • மத்திய அரசாங்கம் மற்றும் அரச சாரா நிறுவனங்களினால் நிதியளிக்கப்பட்டு மாவட்ட செயலகங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் (ரூ .50 மில்லியன் வரை) ஆலோசனை, மேற்பார்வை, முன்னேற்ற கண்காணிப்பு மற்றும் மாவட்ட பொறியாளர்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குதல்.
  • பதவி உயர்வுகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் மாவட்ட பொறியாளர்களின் பட்டய பொறியாளர் தகுதிகளைப் பெற்றுக் கொடுத்தல்.
  • தொழில்நுட்ப அலுவலர்களின் பயிற்சி தேவைகளை ஏற்பாடு செய்தல். .
  • கட்டுமான திட்டங்களின் பௌதீக மற்றும் செலவு தொடர்பான மாறுபாடுகள் குறித்து அமைச்சு கொள்முதல் குழுவிற்கு பரிந்துரை வழங்குதல்.
  • ஒப்பந்தங்களில் மத்தியஸ்தர்களுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குதல் .
  • “நிலா மெதுர” கட்டிடத் தொகுதியின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் .