தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை
தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை
சட்டம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12 - 2016
விதிமுறைகள் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2004-66 திகதி 2017.02.03
பொது அதிகாரசபை - உள்துறை அமைச்சகம் மற்றும் இணைந்த நிறுவனங்கள்
மேற்கண்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக விண்ணப்ப எண் சுவுஐ1 ஐப் பயன்படுத்தி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடம் தகவல்களைக் கோரலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.
தகவல் அலுவலர்
தகவல் அலுவலர்
திரு. பி.எஸ்.பி. அபேவர்தன
மேலதிக செயலாளர்
![]() |
: +94 112 050 326 [Ext: 1406] |
தகவலுக்காக விண்ணப்பித்தல்
தகவலுக்காக விண்ணப்பித்தல்
- தகவல்களுக்கான கோரிக்கைகளை படிவம் RTI 01 இல் விதித்துரைக்கப்பட்டவாறு பூர்த்தி செய்யப்பட்டு பின்வரும் தகவல் அலுவலரிடம் கையளிக்கப்படுதல் வேண்டும். வாய்மொழி மூலமாக அல்லது எழுத்தில் தகவல்களுக்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தலும் தகவல் அலுவலரிடமிருந்து எழுத்திலான ஏற்பொன்றைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
-
தகவல்களை வழங்குவதா அல்லது இல்லையா என்னும் தீர்மானம் முடியுமானவரை விரைவில், எவ்வாறாயினும் 14
நாட்களினுள், வழங்கப்பட வேண்டும். -
தகவல்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டால், தகவல்களுக்கான உரிமை ஆணைக்குழுவினால் விதித்துரைக்கப்பட்ட கட்டண அட்டவணைக்கு இணங்க கட்டணம் ஒன்றைச் செலுத்தியதும் தகவல் வழங்கப்படும் என கோரிக்கையை விடுத்த பிரஜைக்கு தகவல் அலுவலர் தெரிவிப்பார். தகவல், கட்டணம் ஒன்றின் கொடுப்பனவுக்கு உட்படுமாயின், கொடுப்பனவை மேற்கொண்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படுதல் வேண்டும். கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டிய தேவை இல்லையாயின், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படும்.
-
கட்டணத்தைச் செலுத்திய பின்னர் 14 நாட்களினுள் தகவல்களை வழங்க முடியாதாயின், தகவல்களை வழங்குவதற்கு -
ஆகக்கூடியது 21 நாட்கள் வரை - மேலும் காலம் நீடிக்கப்படும் என நீடிப்புக்கான காரணங்களை வழங்கி தகவல்களைக் கோரிய
ஆளுக்குத் தெரிவிக்கப்படும் -
கோரிக்கை ஒரு பிரஜையின் வாழ்க்கை மற்றும் சொந்தச் சுதந்திரத்துடன் தொடர்பானதாக இருக்கும் போது தகவல் அலுவலர் 48
மணித்தியாலங்களுக்குள் வேண்டுகோளுக்கான பதில் ஒன்றை வழங்குதல் வேண்டும். -
பின்வரும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீடு ஒன்று மேற்கொள்ளப்படலாம்.
- தகவலுக்காக வழங்கப்பட்ட கோரிக்கை ஒன்றை தகவல் அலுவலர் மறுத்தல்
- பிரிவு 5 இன் கீழ் அத்தகைய தகவல்களை வழங்குதல் விலக்களிக்கப்பட்டுள்ளது என தகவலைப் பெற அணுகுவதற்கு
தகவல் அலுவலர் மறுத்தல் - சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட கால வரையறைக்கு இணங்கி ஒழுகாமை
- தகவல் அலுவலர் பூரணமற்ற, தவறாக இட்டுச் செல்லும் அல்லது பொய்யான தகவல்களை வழங்கியிருத்தல்
- தகவல் அலுவலர் மேன்மிகையான கட்டணங்களை விதித்திருத்தல்
- கோரப்பட்ட வடிவத்தில் தகவலை வழங்குவதற்கு தகவல் அலுவலர் மறுத்திருத்தல்
- தகவலுக்காக அணுகுவதிலிருந்தும் தன்னைத் தடுப்பதற்காக தகவல் உருக்குலைக்கப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது
அல்லது தவறாக இடப்பட்டுள்ளது என கோரிக்கையை விடுக்கும் பிரஜை நியாயமான ஏதுக்களைக் கொண்டிருத்தல்
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்
திரு. என்.எச்.எம். சித்ரானந்த
செயலாளர்
![]() |
: +94 112 050 310 |
தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவங்கள்
தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவங்கள்
- தகவல்களைப் பெறுவதற்கான விண்ணப்பம்
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும் - குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு
விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்
ஆணைக்குழுவுக்கான மேன்முறையீடு
ஆணைக்குழுவுக்கான மேன்முறையீடு
- குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்தினால் அல்லது சட்டத்தில் விதித்துரைக்கப்பட்ட கால எல்லையினுள் அந்த அலுவலரிடமிருந்து தீர்மானம் ஒன்றைப் பெறத் தவறியதால் இடருறும் எவரேனும் மேன்முறையீட்டாளர், இந்த விதிகளில் இணைக்கப்பட்டுள்ள (பின்னிணைப்பு 1) மாதிரிப் படிவத்தில் தேவைப்படுத்தப்படும் தகவல்களை வழங்குவதன் மூலம் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.
- மேன்முறையீடு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முன்வைக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அது நேரடியாகக்
வழங்கப்படலாம் அல்லது பதிவுத் தபால் ஊடாக அனுப்பப்படலாம். - சட்டத்தின் உப விதி (1)இற்கு இணங்க, ஒரு மேன்முறையீடு சட்டத்தின் உப விதியில் குறித்துரைக்கப்பட்டவாறு, மேன்முறையீட்டுக்கான அடிப்படை நிகழ்ந்தவுடன் அதிலிருந்து இரண்டு மாதங்களினுள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என தேவைப்படுத்தப்படுதல் வேண்டும்.
- அத்தகையை மேன்முறையீட்டுடன் மேன்முறையீட்டாளரால் உண்மைப் பிரதிகள் என தகுந்தவாறு உறுதிப்படுத்தப்பட்ட
பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்படுதல் வேண்டும்;
(i) சட்டத்தின் 24ஆம் பிரிவின் கீழ் தகவலுக்கான கோரிக்கையின் ஒரு பிரதி
(ii) தகவல் அலுவலரிடமிருந்து கிடைத்த பதிலின், ஏதேனும் இருப்பின், ஒரு பிரதி
(iii) சட்டத்தின் பிரிவு 31இன் கீழ் குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் ஒரு பிரதி
(iv) குறித்தளிக்கப்பட்ட அலுவரிடமிருந்து கிடைத்த கட்டளையின், ஏதேனும் இருப்பின், ஒரு பிரதி
(v) மேன்முறையீட்டாளர் நம்பியிருந்த மற்றும் அவரின் மேன்முறையீட்டில் குறிப்பிடப்பட்ட ஏனைய ஆவணங்களின்
பிரதிகளும் மேன்முறையீட்டில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் சுட்டியும் - ஒரு மேன்முறையீடு மேன்முறையீட்டாளரால் இரு பிரதிகளில் கோவையிடப்படல் வேண்டும்.
- உப விதிகளில் (1 - 5) தரப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதவரை, ஆணைக்குழு மேன்முறையீடொன்றை அனுமதிக்காதிருக்கலாம்.
- மேன்முறையீட்டாளர் மேன்முறையீட்டை உரிய நேரத்தில் தாக்கல் செய்வதிலிருந்தும் அவரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணத்தினால் தவிர்க்கப்படின் உப விதி (3)இல் விதித்துரைக்கப்பட்ட இரண்டு மாத காலப்பகுதியின் பின்னர் ஆணைக்குழு மேன்முறையீட்டை அனுமதிக்கலாம்.
ஆணைக்குழுவின் முகவரி
மஹிந்த கம்மன்பில
தலைவர்
தகவல் அறியும் ஆணைக்குழு
அறை இலக்கம் 203-204
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாணாட்டு மண்டபம்
கொழும்பு -07
தொலைபேசி -94 11 2691625
தகவல்களை வழங்குவதற்கான கட்டணம்
தகவல்களை வழங்குவதற்கான கட்டணம்
1. விண்ணப்பக் கட்டணங்கள்
- எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான கோரிக்கையை மேற்கொள்ளும் எந்தவொரு பிரஜைக்கும் தகவலுக்கான உரிமை விண்ணப்பப் படிவத்தை வழங்குவதற்கு கட்டணம் எதையும் விதித்தலாகாது.
- எந்தவொரு பகிரங்க அதிகார சபையும் தகவலுக்கான உரிமைக் கோரிக்கையை செயன்முறைப்படுத்துவதற்கு கட்டணம் எதையும்
விதித்தலாகாது
2. தகவலுக்கான கட்டணம்
தகவலுக்கான கட்டணம்: வேறு விதமாக விதித்துரைக்கப்பட்டாலன்றி,RTI கோரிக்கை ஒன்றுக்கான பதில்நடவடிக்கையாக பகிரங்க
அதிகார சபை ஒன்று தகவலை வழங்குவதற்கு பின்வரும் கட்டணங்கள் விதிக்கப்படலாம்:
(i)நிழற்படப்பிரதி (Photo Copy)
(அ)A4 (21 செமீ x 29.7 செமீ) மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 2/- (ஒரு பக்கம்)
மற்றும் ரூபா 4/- (இரண்டு பக்கங்களும்)
(ஆ) லீகல் அளவிலான (Legal size) (21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ x 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 8/- (இரண்டு பக்கங்களும்)
(இ) மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான கிரயத்தில் வழங்கப்படும்
(iii) அச்சுப்படிகள் (Printout)
(அ) யு4 (21 செமீ x 29.7 செமீ) மற்றும் சிறிய அளவிலான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 4/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 8/- இரண்டு பக்கங்களும்)
(ஆ) லீகல் அளவிலான (Legal size) (21.59 செமீ x 35.56 செமீ) மற்றும் A3 (29.7 செமீ x 42 செமீ) அளவு வரையான காகிதத்தில் வழங்கப்படும் தகவல்களுக்கு ரூபா 5/- (ஒரு பக்கம்) மற்றும் ரூபா 10/- (இரண்டு பக்கங்களும்)
(இ) மேலே தரப்பட்டுள்ள காகிதத்தை விடப் பெரிய அளவிலான காகிதங்களில் வழங்கப்படும் தகவல்கள் உண்மையான
கிரயத்தில் வழங்கப்படும்.
(iii)கோரிக்கையை விடுக்கும் பிரஜையினால் வழங்கப்படும் Diskette, இறுவட்டு(Compact Disk), USB mass drive அல்லது
அவற்றை ஒத்த இலத்திரனியல் சாதனம் ஒன்றில் தகவல்களைப் பிரதியிடுவதற்கு ரூபா. 50/-.
(iv) பகிரங்க அதிகார சபையினால் வழங்கப்படும் Diskette, இறுவட்டு(Compact Disk), USB mass drive அல்லது அவற்றை
ஒத்த இலத்திரனியல் சாதனம் தகவல்களைப் பிரதியிடுவதற்கு உண்மையான கிரயத்துடன் ரூபா. 50/-.
(v) ஏதேனும் ஆவணம் அல்லது சாதனத்தை ஆராய்வதற்கு அல்லது நிர்மாணத் தலத்தின் பரிசோதனைக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு ரூபா. 50/-. இதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேல் எடுக்குமாயின், முதல் மணித்தியால ஆய்வுக்கு / பரிசோதனைக்கு கட்டணம் விதிக்கப்படாது. இது அத்தகைய பரிசோதனையை முன்னர் கட்டணமின்றி வழங்கிய பகிரங்க அதிகார சபைகளின் நடைமுறைக்கு பங்கமின்றி இது மேற்கொள்ளப்படுவதுடன் இந்நடைமுறை இந்த உப விதியினால் தடைபெறாது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
(vi) மாதிரிகள் அல்லது உருப்படிவங்களுக்கு உண்மையான கிரயம் விதிக்கப்படும்.
(vii) மின்னஞ்சல் ஊடாக வழங்கப்படும் தகவல்களுக்கு கட்டணம் இல்லை
3. சுற்றறிக்கைகள் அல்லது ஒழுங்குவிதிகள் மூலமாக பகிரங்க அதிகாரசபைகளினால் விதித்துரைக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட முன்னைய கட்டண அட்டவணை இருக்குமிடத்து, விதி 4இல் விதித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் எவ்வாறிருப்பினும் அந்தக் கட்டண அட்டவணை தொடர்ந்தும் தொழிற்பாட்டில் இருத்தல் வேண்டும்.
ஆயின், தற்போதுள்ள கட்டண அட்டவணைகள் தொடர்பான கோரல்களின் ஏதேனும் பிணக்கு கட்டணங்கள் மற்றும்
மேன்முறையீடுகள் பற்றிய இந்த விதிகளுக்கு இணங்க ஆணைக்குழுவினால் தீர்மானிக்க வேண்டிய மேன்முறையீட்டுக்கான ஒரு
விடயப்பொருளாகலாம்.
4.கட்டணமின்றி வழங்கப்படும் தகவல்கள்
(1)மேலே உள்ள விதி 4இல் உள்ள எதனாலும் தடைப்படாது, ஆறு பக்கங்கள் (A4 அளவு) நிழற்பிரதிகள் அல்லது அச்சுப்படிகளில் தயாரிக்கப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்ட தகவல்களை பகிரங்க அதிகார சபை கட்டணம் இன்றி வழங்குதல் வேண்டும்.
(2) சாதாரணமாக கட்டணமின்றி கிடைக்கக்கூடியதாகவுள்ள தகவல்கள் தொடர்ந்தும் கட்டணமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.
5. கட்டணம் செலுத்தும் முறை
- இந்த விதிகளில் வேறு எங்கேனும் காணப்படும் எதனாலும் தடைப்படாது, பகிரங்க அதிகாரசபை தகவல்களுக்கு பின்வரும் விதத்தில் கட்டணங்களை சேகரிக்கலாம்.
- தகவல் அலுவலருக்கு செலுத்தும் பணமாக;
- பகிரங்க அதிகார சபையின் கணக்கீட்டு அலுவலருக்கு முகவரியிட்டனுப்பப்படும் வங்கி உண்டியல்
- பகிரங்க அதிகார சபையின் கணக்கீட்டு அலுவலருக்குச் செலுத்தக்கூடியதாக மேற்கொள்ளப்படும் தபால் அலுவலக
கொடுப்பனவுச் சிட்டை அல்லது தபால் கட்டளை.